கத்தார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றம்
கத்தார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றம்
அறிமுகம்
கத்தார் தமிழ் சொல்வேந்தர்கள் மன்றம் : Toastmasters International எனும் இலாப நோக்கற்ற பன்னாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒரு தமிழ் வழி மன்றம்.
நோக்கம்: தலைமைத்துவம், ஆளுமைத்திறன், பேச்சாற்றல் போன்ற எண்ணற்ற திறமைகளை வளர்த்துக் கொள்ள இது ஒரு சிறந்த தளம்.
நெறிமுறைகள்: மதம், இனம், பாலியல் பற்றிய விவாதங்கள் தவிர்த்து நோக்கம் சார்ந்து மட்டுமே பயணப்பட வேண்டும் என்பதே இலக்கு.
கூட்டம்: மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது செவ்வாய்க்கிழமை மாலை 6.30 முதல் 8.50 வரை நடைபெறும்.
நீங்கள் ஏன் சொல்வேந்தர்கள் மன்றத்தில் (Toastmasters) சேர வேண்டும் ?
ஒவ்வொரு முறையும் உங்களைப் பேச அழைக்கும்போதும் மேடையில் உறைந்து போவீர்களா? உடனடியாகப் பேசச் சொன்னால் வார்த்தைகளால் தடுமாறுகிறீர்களா? ஒரு குழுவினருடன் உங்கள் எண்ணங்களைப் பகிரும்படி கேட்கப்படும் போதெல்லாம் அறையை விட்டு ஓடிப்போக நினைக்கிறீர்களா?
ஆம் எனில், சொல்வேந்தர்கள் மன்றம் (Toastmasters) நிச்சயமாக உங்களுக்கானது!
சொல்வேந்தர்கள் மன்றம் என்பது மேடைப் பேச்சுக்கு மட்டுமல்ல, ஒரு சிறந்த பேச்சாளராகவும், தலைவராகவும் ஆவதற்காக உதவும் 11 வழித்தடங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வழித்தடமும் ஐந்து மட்டங்களில் 10 திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் உங்கள் தலைமைத்துவத்தின் பல்வேறு அம்சங்களையும், நீங்கள் முன்னேறும்போது மேடைப் பேச்சுத் திறனையும் அதிகரிக்கும்.
ஒவ்வொரு நபரும் தங்களைப் பற்றி பேசுவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் ஒரு கன்னிப்பேச்சில் தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து பலதரப்பட்ட தலைப்புகளில் குறிப்பிட்ட நோக்கங்களோடு உறுப்பினர்கள் உரைகளை வழங்குவதால், அவர்கள் படிப்படியாக தன்னம்பிக்கை மற்றும் பெரிய பார்வையாளர்களை எதிர்கொள்ள தைரியம் பெறுகிறார்கள்.
சொல்வேந்தர்கள் மன்றம் (Toastmasters) என்பது ஒருவரின் தலைமைத்துவம், தகவல் தொடர்பு மற்றும் மேடைப் பேச்சுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான தளமாகும். இது லாப நோக்கமற்ற அமைப்பாகும். இது அமெரிக்காவில் தலைமையகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மன்றங்கள் மூலம் செயல்படுகிறது. இதை எழுதும் நேரத்தில், சொல்வேந்தர்கள் மன்றம் (Toastmasters) 141 நாடுகளில் உள்ளது மற்றும் உலகம் முழுவதும் 16,000 க்கும் மேற்பட்ட மன்றங்கள் மற்றும் 350,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.